தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம்

இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சி – மத்தியக் குழுவின் அறிக்கை சூலை 4, 2020 நம் நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பொறுக்க முடியாததாக ஆகிவிட்டது. வேலையின்மை, சுரண்டல் மற்றும் வறுமை ஆகியவை இதுவரை பார்த்திராத அளவை எட்டியுள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக, பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும், நாட்கூலித் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களும் கூட வேலையிலிருந்து தூக்கியெறிப்படுகின்றனர். பணியில் இருப்பவர்களில் பலருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. முடக்கப்பட்டதன்

Continue reading

சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள்:

இந்திய அரசின் அடக்குமுறையான காவல்துறை அமைப்பின் மற்றொரு கொடூரம் வெட்டவெளிச்சம் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் நகர பஞ்சாயத்தில் வசித்து வந்த தந்தையும் மகனுமாகிய திரு ஜெயராஜ் (59) மற்றும் திரு இம்மானுவேல் பென்னிக்ஸ் (31) காவல்துறையால் காவல் நிலையத்தில் வைத்துக்  கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மிருகத்தனமான சித்திரவதையையும் கொலையையும் மூடிமறைக்க காவல்துறையின் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி நாடெங்கிலும்

Continue reading

வேளாண் விளைபொருட்கள் விற்பனையை தாராளமயமாக்க அவசரச் சட்டங்கள்:

விவசாயிகள் மற்றும் விவசாய விளைபொருட்களின் மீது வர்த்தக ஏகபோகங்களின் மேலாதிக்கத்தை நிறுவுதல் மத்திய அமைச்சரவை அங்கீகரித்த, “வேளாண்மை உற்பத்தி விற்பனை மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வழிவகுத்தல்) அவசரச் சட்டம், 2020” மற்றும் “விலைக்கு உத்திரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த அவசரச் சட்டம், 2020” ஆகிய இரண்டு அவசரச் சட்டங்களை 2020 சூன் 5 ஆம் தேதி, இந்திய குடியரசுத் தலைவர் அறிவித்திருக்கிறார்.

Continue reading

நீதிபதி ஹொஸ்பெட் சுரேஷ் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கல்

மனித மற்றும் சனநாயக உரிமைகளுக்கான அச்சமற்ற போராளியான நீதிபதி ஹொஸ்பெட் சுரேஷ் 2020 சூன் 11 அன்று இயற்கை எய்தினார். மக்களுடைய உரிமைகளுக்காக ஓய்வு ஒழிவின்றி போராடி வந்த அவருடைய இழப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 1929, சூலை 20 ஆம் தேதி கர்நாடகாவின் சூரத்கலில் உள்ள ஹோசபெட்டு என்ற இடத்தில் பிறந்த நீதிபதி சுரேஷ் மங்களூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும்,

Continue reading

நாடு தழுவிய போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு

தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகள் மீது, குறிப்பாக கொரோனா பெருந் தொற்றுநோய் மற்றும் முடக்கத்தின் போது அரசாங்கம் நடத்திவரும் தாக்குதல்களுக்கு எதிராக, ஐஎன்டியுசி (INTUC), ஏஐடியுசி (AITUC), எச்எம்எஸ் (HMS), சிஐடியு (CITU), ஏஐயுடியுசி (AIUTUC), டியுசிசி (TUCC), சேவா (SEWA), ஏஐசிசிடியு (AICCTU), எல்பிஎப் (LPF) மற்றும் யுடியுசி (UTUC) ஆகிய பத்து மத்திய தொழிற்சங்கங்கள் சூலை 3 ம் தேதி நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளை

Continue reading

தொழில்கள் மற்றும் வணிகங்களுக்கு அரசின் ஊக்கத்தொகுப்பு:

தனியார்மயத்தையும் மூலதனக் குவிப்பையும் விரைவுபடுத்தும் பிரதமர் மோடி மே 12 ஆம் தேதி 20 இலட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகுப்பை அறிவிக்கையில், “ஆத்மனிர்பர் பாரத் அபியான்” அல்லது “சுயசார்பு கொண்ட இந்தியா” இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். தொகுப்பு பற்றிய அனைத்து விவரங்களும் அறிவிக்கப்பட்டபோது, இந்த முழக்கத்தின் உண்மையான பொருள் என்ன என்பது தெளிவாகியது. இதன் பொருள் என்னவென்றால், மத்திய அரசிடமிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு

Continue reading

தம் ஊருக்குச் செல்லும் வழியில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்:

மனிதாபிமானமற்ற அமைப்பு, உணர்வற்ற அரசு மே 16 ஆம் தேதி அதிகாலையில், உத்தர பிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் லக்நோவிலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில், தத்தம் ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பயணித்த லாரிகள் மோதிக் கொண்டதில் குறைந்தது 24 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று சேர வேண்டுமென தீவிரமாக முயன்று வரும் போது ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான விபத்துக்களில் இது சமீபத்தியதாகும், அவற்றில்

Continue reading

ஐதிராபாத் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை

கொரோனா வைரசு ஊடங்கு நிலையில், ஐ.ஐ.டி ஐதிராபாத் வளாகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்ப விரும்புகிறார்கள். தெலுங்கானா சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள காண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஐ.ஐ.டி ஐதிராபாத் வளாகத்தின் ரூ .644 கோடி கட்டுமான திட்டத்தின் 2-வது கட்டத்தில் எல் அண்ட் டி (L&T) நிர்வாகத்திடம் இந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.. மார்ச் 24 முடக்கத்திற்கு முன்னர், பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்,

Continue reading

ஊரடங்கிற்கு மத்தியில் – நாடெங்கிலும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றனர்

நிறுவனமயப்படுத்துவதை பாதுகாப்புத் தொழிற் சங்கங்கள் எதிர்க்கின்றன ஆத்மநிர்பார் பாரத் முன்முயற்சியின் 4 வது அத்தியாயத்தின் ஒரு பகுதியாக, போர்த் தளவாடங்கள் தொழிற்சாலை வாரியத்தின் (OFB) நிறுவனமயப்படுத்துவதையும், பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு (FDI) அதிகரிப்பதையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டார். இந்தத் திட்டங்களுக்கு அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (AIDEF), இந்திய தேசிய பாதுகாப்புத் தொழிலாளர் சம்மேளனம் (INDWF) மற்றும் பாரதிய பிரதிரக்ஷா மஜ்தூர் சங்கம்

Continue reading

ஊரடங்கிற்கு மத்தியில் – நாடெங்கிலும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றனர்

தமிழக செவிலியர்கள் பணி நிரந்தரமும், சம ஊதியமும், ஊதிய உயர்வும் கோருகின்றனர் மருத்துவமனை நிர்வாகங்கள், செவிலியர்களுடைய சம்பளம் மற்றும் அலவன்சுகளை மறுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் பங்கேற்றுவரும் தமிழக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் போராடுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யும் செவிலியர்கள் எந்தவித வெட்டுக்களும் இன்றி தங்களுக்கு சம்பளமும் அலவன்சுகளும் வழங்குமாறு கோருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள ஒப்பந்த செவிலியர்கள்

Continue reading